Designed by Iniyas LTD
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் மோதினர்.
பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் தனது சகோதரி வீனசை வென்றார்.
செரினா வெல்லும் 23-ஆவது க்ராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். இன்னும் ஒரு பட்டம் வென்றால் உலக சாதனையை அவர் சமன் செய்வார். ஆஸ்திரேலிய ஓப்பனில் அவர் வெல்லும் 7-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.