தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம் திறப்பு விழா

nedu

உலகில் பரந்து வாழும் தமிழினத்தின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்து வகையிலும் தமிழினத்தை உயர்த்த முகநுல் ஊடாக உருவாக்கபட்டு உன்னத நோக்கோடு பல வாழ்வாதாரமற்ற தமிழ் குடும்பங்களை தனது தாய்மை அன்பால் உரிய காலத்தில் அணைத்து அவர்களோடு சேர்ந்து தானும் வளர்ந்து தனது முதல் விழுதினை வலிமையாக தமிழகத்தில் அரசால் பணியக செயல்பாடு உறுதிசெய்யபட்டு ஊன்றியுள்ளது.

இத்தகைய பணியகம் நேற்று மாலை 5.15 மணியளவில் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் சிறப்பாக தனது திறப்புவிழாவினை ஆணையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பளர் திரு.வல்வை அகலினியன் அவர்களின் முதல் புதல்வி செல்வி துவாரகா அவர்கள் கையால் நாடா வெட்டபட்டு இனிதாக அரங்கேற்றியது.

இந்நிகழ்வில் புலவர் திரு. இரத்தின வேலு, திரு. செந்தமிழ்வாணன், திரு. சின்னப்பா தமிழர், திரு. புகழ்ச்செல்வி பரணிப்பாவலன், திரு. தமிழ் மண் மற்றும் திரு. மணிவண்ணன் போன்ற சான்றோர்கள் கலந்துகொண்டு பணியத்தின் செயல்பாடுகளை விளக்கியும் பாராட்டியும் இதில் தலைமையேற்ற அய்யா பழ. பழ நெடுமாறன் அவர்கள் பணியகத்தின் செயல்பாடுகளை புகழ்ந்து நானும் எனது தோழர்களும் ஆணையத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் இறுதிவ துனைநிற்போமென்றும் நாமும் உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகத்தின் கைகளோடு கைகோர்த்து தமிழர்களின் நிலை மாற்றுவோமென உறுதிகொண்டு நிகழ்வை மகிழ்வோடு நிறைவு செய்தனர்.

நிகழ்ச்சி தொகுப்பு

1. உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு. வல்வை அகலினியன் அவர்களின் முதல் புதல்வி செல்வி. துவாரகா அவர்களின் கையால் நாடா வெட்டபட்டது.

2. பணியகத்தின் பொருளாளர் செல்வி.ஸ்ரீதேவி அவர்கள் கைகளால் குத்துவிளக்கு ஏற்றபட்டது.

3. பணியகத்தின் ஒருங்கிணைப்பாளர் பழனிராஜா அவர்கள் வரவேற்பு உரை

4. திரு. புகழ்ச்செல்வி பரணிப்பாவலன் அவர்கள் பொருளுரைப்பு

5. அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமை உரையும் உறுதிமொழியினயும் வழங்கினார்

6. புலவர் திரு. இரத்தின வேலு, திரு. செந்தமிழ்வாணன்,
திரு. சின்னப்பா தமிழர், திரு. தமிழ் மண் மற்றும் திரு. மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

7. பணியகத்தின் ஊடக தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு பணிப்பாளர் திரு.அருண்குமார் அவர்கள் விளக்கஉரை வழங்கினார்.

8. பணியகத்தின் செயலாளர் திரு. அரி கிருட்டிணன் அவர்கள் நன்றி உரையும் வழங்கி விழாவினை சிறப்பாக நிறைவு செய்தனர்.

9. இத்தகைய இனிய நிகழ்வினை சிறப்பாக பணியகத்தின் உதவி ஒருங்கிணைப்பாளர் திருமதி. இளமதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வினை உன்னத உள்ளம் கொண்ட உலகம் இயங்கவும் வளரவும் காரணமாக திகழும் உண்மையான ஒப்பற்ற ஊடகவியளாளர்கள் மக்களிடம் கொண்டுசேர்த்து தமிழர்களின் நலனில் பங்கேற்க வேண்டுமென மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இத்தகைய செயல்கள் நடைபெற தமிழுணர்வோடு தனது செயல்பாடுகளை முன்னெடுத்த அனைத்து உன்னத உள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகத் தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் பணியகம்
சென்னை
தமிழ்நாடு.
அழைக்க….. 43506187

Comments
Loading...