தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அமல் கருணாசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்திற்கு உதவி புரிந்ததாக அவருக்கு எதிராக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அமல் கருணாசேகர  இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் இராணுவ மருத்துவமனையில் தற்போது அவர்  சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் கல்கிஸ்ஸ நீதவானுக்கு அறிவிக்கப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி கடத்தப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது

குறித்த சம்பவம்  தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...