Designed by Iniyas LTD
எஸ்.ஆர்.லெம்பேட் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் இரண்டாவது தடவையாக மீண்டும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் நேற்று திங்கட்கிழமை 2 ஆவது தடவையாக சுமார் மூன்று மணி நேரம் தீவிர விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் அவர்களுக்கு மன்னார் காவல்துறையூடாக கடந்த வெள்ளிக்கிழமை (11-07-2014) அழைப்பனைக் கடிதம் மன்னார் மூர்வீதியில் உள்ள அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
326-14 இலக்கம் கொண்ட குறித்த கடிதத்தில் ஊடகவியலாளரான எஸ்.ஆர்.லெம்பேட் என்பவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கொழும்பு குற்றத்தடுப்பு (ரி.ஐ.டி) காரியாலயத்திற்கு கடந்த திங்கட்கிழமை 2014-07-14 காலை 10.00 மணிக்கு வருகை தருமாறு குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக சென்றிருந்தார்.
மாலை 1.30 மணியளவில் ஆரம்பமான விசாரனை சுமார் 3.45 மணியளவில் முடிவடைந்தது. இதன் போது கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பாகவும் குறிப்பாக ஊடகவியலாளரின் மின்னஞ்சல் முகவரியின் இரகசிய இலக்கம் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.குறிப்பாக விசாரணைகள் தொடர்பில் ஊடகவியலாளரின் மின்னஞ்சலின் இரகசிய இலக்கம் வழங்காது விட்டால் மீண்டும் 3 ஆவது தடவையாக விசாரணைகளுக்காக அழைக்கப்படுவீர்கள் என வன்மையாக தெரிவித்ததாக ஊடவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.