Designed by Iniyas LTD
கட்சி பேனர்களால் கண்காணிப்பு கேமராக்கள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் விளம்பர பேனர்கள் வைப்பதற்காக கண்காணிப்பு காமிராக்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சியின் விளம்பர பேனர்களை, சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக வைத்துள்ளனர். அப்போது சாலையோரம் போலீசார் பொருத்தியிருந்த கண்காணிப்பு காமிராக்கள் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. மேலும் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும் கேபில்களும் சேதப்படுத்தப்பட்டன. இதே போன்று நகரின் பல இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக பல்வேறு அரசியல் கட்சியினர் பேனர்களை வைத்துள்ளது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.