Designed by Iniyas LTD
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை..
சர்வதேக ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் நாட்டிற்குள் ஊடுருவுவதை தடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச பொலீசாரின் தகவல்களை தொடர்ந்து சர்வதேச ஆயுதக்குழுவுடன் சம்மந்தப்ட்ட அமைப்பினை சேர்ந்தவர்களை அடையாளம் காண்பதற்கான புதிய தொழில்நுட்பத்துடனான நடவடிக்கை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
இதேவேளை நாட்டில் இருந்து வெளியேறும் நபர்கள் தொடர்பிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.