தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் அடி வாங்கிய சிங்கள இராணுவத்தினர்

புலிகள் தோல்வியடைவோம் என்று தெரிந்த யுத்தத்தை நடத்தவில்லை.

கணிசமான யுத்தங்களில் வெற்றி தோல்வி என்பவை கணிக்கமுடியாதவை.அவை எப்போதுமே சுண்டப்பட்ட நாணயம் எந்தப் பக்கம் விழும் என்பது போன்றவை.

மகிந்தவுடன் முரண்படத் தொடங்கிய சரத் பொன்சேகா முக்கியமான தகவல்களை வெளியிட்டார்.

புலிகளின் நடைமுறை அரசின் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு நடந்தபோர் சிங்களப்படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தியதாகவும் இராணுவம் விட்டுவிட்டுப் பின்வாங்கி ஓடத்தயாரான வேளையில் தான் மீண்டும் வந்து படைகளை ஒழுங்குபடுத்தி போரை வெற்றிக்கு இட்டுச் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் நடந்தபோரானது அரசுக்கு சாதகமாக மாறாமல் இருந்திருந்தால் மீண்டும் ஒரு ஜெய சிக்குறுவாகவே சிங்களப் படையெடுப்பு முடிந்திருக்கும்.வவுனியாவிலோ,மதவாச்சியிலோ சிங்களப்படைகள் பின்வாங்கி ஓடிவந்து முன்னரங்கு அமைத்திருப்பார்கள்.

Comments
Loading...