தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

கிளிநொச்சியில் மாணவர் ஒருவரைக் காணவில்லை என்று காவல்துறையில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் க.பொ.த.சா.தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காக காத்திருக்கும் மாணவனே நேற்று முன்தினம் இரவு தொடக்கம் காணாமற்போயுள்ளார். கிளிநொச்சி விவேகானந்த நகர் மேற்கை சேர்ந்த நவரத்தினராசா கௌசிகன் என்ற மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 077-6231011 என்ற இலக்கத்துடன் அல்லது அருகிலுள்ள காவல்துறை நிலையங்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

 kawsigan

Comments
Loading...