தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூடங்குளம் விவகாரம்: அணு உலை பாதிப்பு குறித்து தொடர்வண்டி பிரச்சாரத்தை தொடங்கினார் உதயகுமார்

Koodankulam_863403fகூடங்குளம் அணு உலையால் ஏற்படும் பாதிப்பு குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் தொடர் வண்டி பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் 20 பேர் கன்னியாகுமரியிலிருந்து இந்த பரப்புரை பயணத்தை தொடங்கியுள்ளனர்.

 இந்த குழு இன்று கோவை வரையிலும், நாளை காரைக்கால் பகுதியிலும், அதற்கு அடுத்த நாள் தஞ்சாவூரிலும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்க பணிகளை எதிர்ப்பதற்கான காரணத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்த பயணம் அமையும் என உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அணுமின் நிலையத்தில் 1 மற்றும் 2ஆவது உலைகளின் கட்டடங்கள் பாதுகாப்பற்ற பகுதியில் இருப்பதாக பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருவதாகவும் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...