Designed by Iniyas LTD
கொழும்பில் பெரும் பதற்றம்- நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு…

கொழும்பிலுள்ள ஷங்ரி – லா நட்சத்திர ஹோட்டலிலும் சற்றுமுன்னர் குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, கொழும்பிலுள்ள சினமன் கிரான்ட் நட்சத்திர ஹோட்டல் மற்றும் கிங்ஸ்பரி நட்சத்திர ஹோட்டல் ஆகியவற்றிலும் குண்டுவெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவத்தில் நூற்றிற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை கொழும்பு மாத்திரமன்றி நாடளாவிய ரீதியிலுள்ள பல தேவாலயங்களிலும் இன்று காலை முதல் பல குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில்,
சகல இடங்களிலும் பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குவிக்கப்பட்டு தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.