Designed by Iniyas LTD
சர்வதேச நீதிபதிகள் வேண்டும் என்ற அறிக்கையை கூட்டமைப்பு வரவேற்கிறதாம்!
மனோகரி முத்தட்டகம தலமையிலான குழுவினரின் நல்லிணக்க பொறிமுறைக்கான அறிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
மனோகரி முத்தட்டகம தலமையிலான குழுவினரின் நல்லிணக்க பொறிமுறைக்கான அறிக்கை தற்போது வெளிவந்துள்ளது. அதில் உள்ள முக்கிய விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
குறிப்பாக நீதிமன்ற பொறிமுறையில் கலப்பு நீதிமன்ற பொறிமுறையினையே பரிந்துரைந்துள்ளனர். அதில் வெளிநாட்டு நீதிபதிகளுடன் உள்ளூர் நீதிபதிகளான மக்களின் மொழியிலான நீதிபதிகளை உள்ளடக்கியவகையில் அமைவதாக சிபாரிசு செய்துள்ளதோடு வடக்கு கிழக்கு மக்களின் விருப்பமாக இதனையே குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமன்றி இவ்விடயத்தினை தெற்கு மக்களும் அதனை எதிர்க்கவில்லை. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் குறித்த அறிக்கையினை கூட்டமைப்பு இதனை வரவேற்கின்றது என்றார்.