தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடைமுறைகளுக்கு ஆதரவில்லை: ரணில் தகவல்

இலங்கையில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு தேர்தல் நடைமுறையையும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரிக்காது என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

meetஇனிவரும் காலங்களில் நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் முறையை மாற்றியமைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தின் 20ஆவது சட்ட திருத்தத்தை சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள் தொடர்ந்தும் எதிர்த்து வருகின்றன.

மேலும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள புதிய தேர்தல் நடைமுறையின்படி பெருவாரியான இடங்கள் தொகுதி அடிப்படையிலும் மீதியுள்ள இடங்கள் விகிதாசாரம் மற்றும் தேசிய பட்டியல் மூலமும் நிரப்பப்பட உள்ளன. ஆனால் புதிய நடைமுறை நாடாளுமன்றத்தில் சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவத்தை குறிப்பிடத்தக்க அளவு குறைத்துவிடும் என்று பல சிறிய கட்சிகள் வாதிட்டு வருகின்றன.

இச்சூழலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, பல முஸ்லிம் கட்சிகள் உட்பட, பல கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஞாயிறன்று சந்தித்து உரையாடியுள்ளனர். அப்போது சிறிய கட்சிகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் எந்த மாற்றத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சி உடன்படாது என்று பிரதமர் தங்களிடம் உறுதியளித்ததுடன் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள போராட்டங்களுக்கும் ஆதரவு தர இணக்கம் தெரிவித்ததாகவும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட மனோ கணேசன் செய்தியாளார்களிடம் கூறியுள்ளார்.

Comments
Loading...