தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனீவாவில் சிறீலங்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர் என டக்ளஸ் தெரிவிப்பு.

download (1)

சிறீலங்காவின் உண்மை நிலைமைக்குப் புறம்பான தகவல்களை புலி உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்கு விளக்கமளித்துள்ளார்.

அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்து விளக்கமளித்த அமைச்சர், விடுதலைப்புலிகளுக்கு சிறுவர் போராளிகளை இணைப்பதற்கு ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி,ஜெனீவா சென்று சிறீலங்காவின் உண்மை நிலைக்குப் புறம்பான தகவல்களையும், வடமாகாணம் தொடர்பான பொய்யான தகவல்களையும் வழங்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்..

சிறீலங்காஅரசாங்கம் மீது அவர் போலியான குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார். என்றும் இரண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திலேயே அவர் இவ்வாறான பொய்யான தகவல்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கியிருப்பதாக டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைக்குக் கூறியுள்ளார்.

அனந்தியின் கருத்தானது சிறீலங்கா அரசாங்கம் மீதுள்ள நன்பெயரைக் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், சர்வதேச சமூகத்திடம் அனுதாபம் பெறும் வகையில் அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதுடன், சிறீலங்காவின் உண்மை நிலைமைக்குப் புறம்பாக முன்னெடு க்கப்படும் பிரசாரங்களை முறியடித்து உண்மை நிலைமையை தூதரகங்கள் ஊடாக விளக்குவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது ஜெனிவா தீர்மானத்தின் தீர்வுத்தன்மை சிறீலங்காவுக்கு எதிராக வலுவடையும் போது தமக்கான பங்கிற்கு அமைச்சரும் பரப்புரைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார் என்பது புலப்படுகிறது..

Comments
Loading...