தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

electionஇரண்டாவது நாளாக இன்று கூடிய இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் பல முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு இரண்டு நிமிட நேர மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதன் பிறகு முக்கியமான இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன,குறிப்பாக 2015 ஆம் ஆண்டு பெரும் மழையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர்,மறைந்த பழம் பெரும் நடிகை மனோரம்மாவுக்கும்,ஜம்மு காஷ்மீர் முதல்வர் முக்தி முகம்மது சையத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏ.பி பரதன் உள்ளிட்டவர்களுக்கு தமிழக சட்டமன்றத்தில் இரங்கல் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது.

அதன்பிறகு கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பட்டுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கேட்ட முக்கியமான கேள்விக்கு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலளித்தார்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைப்பதில் சிக்கல்கள் நீடிப்பதாகவும்,சிக்கல் இல்லாத இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments
Loading...