Designed by Iniyas LTD
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் கூட்டமைப்பு – கோத்தா
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சாடியுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் ஸ்ரீலங்கா விஜயத்ததால் எந்தவொரு மாற்றமும் ஏற்படபோவதும் இல்லையென தெரிவித்துள்ளார்.
கொழும்பு – 1இல் அமைந்துள்ள சம்புத்தாலோக விஹாரையில் பத்து இலட்சம் கையெழுத்துக்களை திரட்டும் நடவடிக்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மற்றும் அவரது இளைய சகோதரரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயராளருமான கோட்டாபய ராஜபக்ச ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்கு உரையாற்றிய கோட்டாபய “தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் தலைவரால் நியமிக்கப்பட்டவர்கள்.
அதனால் அவர்கள் ஜனநாயக தலைவர்கள் அல்ல. அவர்கள் இன்னமும் புலிகளின் கொள்கைகளையே முன்னெடுத்துச் செல்கின்றனர். ஆகவே எங்களது நல்ல முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாயின் இந்த நிலை மாற வேண்டும். அதனை தற்போதைய தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வேறு நாட்டில் வாழும் ஒருவர் ஒருநாளில் நாட்டிற்கு விஜயம் செய்து எவ்வாறு நாட்டின் பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும். அவர்கள் பேசுவதற்கு பயற்சி அளிக்கப்பட்டவர்களையே சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்களிடம் பேசி எவ்வாறு ஹூஸைனால் நாட்டு நிலைமைகளைப் புரிந்து கொள்ள முடியும். அதுவொரு வேடிக்கையான விடயம்“ என்றார்.