Designed by Iniyas LTD
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வருட இறுதிக்குள் நிறைவு
சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணையை இந்த வருட இறுதிக்குள் நிறைவுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார். இதுவரையில் தமிழ் அரசியல் கைதிகளின் 16 வழக்குகளின் விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசேட மேல் நீதிமன்றத்தினூடாக இந்த வழக்குள் விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.