தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலீபான்களில் தாக்குதலில் 132 பள்ளிக்குழந்தைகள் பலி

தலீபான் தீவிரவாதிகள், பாகிஸ்தானில் பெஷாவரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று கொடூர மான மிருகவெறி தாக்குதலை நடத்தினர் இதில்ம் 132 பள்ளி குழந்தைகள் அடங்குவர் ,  மேலும் 9 பள்ளி ஆசிரிய்ர் மற்றும் ஊழியர்கள் அடங்குவர்.talibans_attack

245 பேர் படுகாயம் அடைந்து, மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், 25 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடம் அளிப்பதாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.

தாக்குதல் தொடுத்த தீவிரவாதிகளில் ஒருவர், உடலில் கட்டி வந்த குண்டுகளை வெடிக்கச்செய்து உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 5 தீவிரவாதிகளும் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரை ஆனார்கள். இதையடுத்து தாக்குதல் முடிவுக்கு வந்தது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகளையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 141 ஆகும்.

தீவிரவாதிகள் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இந்த கொடூரச் செயலை குழந்தைகளை பார்க்கும்படி செய்துள்ளனர்.

உலக நாடுகளில், சமீப காலத்தில் நடந்த தாக்குதல்களில் அதிபயங்கரமான தாக்குதல் இதுதான்.உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

தீவிரவாதிகள் பள்ளி குழந்தைகளை தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு உள்ளனர். அனைவருக்கும் தலையில் குண்டடிபட்டு உள்ளது. மேலும் சில குழந்தைகளை தலையை துண்டித்தும் கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் பலியான குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 5 லடசமும்  காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 2 லடசமும் நிவாரன உதவி வழங்குவதாக பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்து உள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு கருதி பிரதமர் நவாஸ் ஷெரீப் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப்  கடசி தலைவர் இம்ரான் கான், கலந்து கொண்டார்.

132 பள்ளிக் குழந்தைகள் உள்பட 141 சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பாகிஸ்தான் முழுவதும் மக்கள் பொது இடங்களில் கூடி மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது பள்ளி மாணவ-மாணவிகள் கண்ணீர் விட்டனர். நாட்டில் தேசிய கொடி அரைகம்பத்தில் பறக்கவிடபட்டு உள்ளது.

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 132 மாணவ-மாணவிகளின் உடல்கள் பரிசோதனைக்கு பிறகு உடனுக்குடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்றிரவே பெரும்பாலான உடல்கள் ஒப்படைக்கப்ட்டு விட்டது. இன்று காலை பலியான மாணவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. சில இடங்களில் ஒரே பகுதியில் அடுத்தடுத்து குழிகள் தோண்டி மொத்தமாக மாணவர்கள் உடல்கள் வைத்து அடக்கம் செய்யப்பட்டது. இது பெஷாவர் நகர மக்களிடம் ஆழ்ந்த வேதனைஅயை ஏற்படுத்தி உள்ளது.

Comments
Loading...