Designed by Iniyas LTD
தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைத்த முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைத்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு…
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்த முன்னாள் போராளி பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ்.நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வை முன்னின்று ஒழுங்கமைத்தவர்களில் ஒருவரான முன்னாள் போராளி கந்தையா பிரபாகரன் என்பவரையே பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.
யாழ். சாவகச்சேரி மறவன்புலவு பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் எதிர்வரும்- 29ஆம் திகதி அவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளையிக் , குறித்த அழைப்பாணையில் காரணமெதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.