Designed by Iniyas LTD
திருநங்கைகளுக்கு சம உரிமை
திருநங்கைகளுக்கு சம உரிமை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியுள்ளது. கடந்த மாதம் திருச்சி ராஜ்யசபா உறுப்பினர் சிவா, திருநங்கைகளுக்கும் சமூகத்தில் ஆண் பெண் போல சம உரிமை வழங்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களை கொண்ட சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.
இந்த தனி நபர் மசோதா மீதான விவாதம் முடிந்து இன்று ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
‘திருநங்கைகள் உரிமை சட்டம் 2014’ என்ற பெயரிலான இந்த சட்டம் இனிமேல் மக்களவைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அங்கு மசோதா நிறைவேறினால் இனி இந்த சட்டம் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜ்யசபா வரலாற்றிலேயே 46 வருடங்களுக்கு பிறகு தனி நபர் (அரசு சார்பில் அல்லாத) மசோதா ஒன்று நிறைவேறியுள்ளது இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
இதுகுறித்து சிவா கூறுகையில், சமூகத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக திருநங்கைகள் கூறிவரும் நிலையில்தான், இந்த மசோதாவை தாக்கல் செய்யும் முடிவுக்கு வந்தேன்.
இந்த சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த ராஜ்யசபா உறுப்பினர்கள் அனைவருக்குமே நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.