தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென் அமெரிக்க நாடுகளில் பரவி வரும் புதியவகை ஆட்கொல்லி வைரஸ்…

தென் அமெரிக்க நாடுகளில் பரவி வரும் புதியவகை ஆட்கொல்லி வைரஸ் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ்களின் தாக்கம்  சிலி மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் அதிகமாகக் காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

நாயின் மூலமாக பரவுவதாகக் கூறப்படும் இந்த வைரசுக்கு ஹண்டா வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வைரசின் தாக்குதலால் சிலி நாட்டில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் வைரசால் பாதிக்கப்பட்ட 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகின்றதாகவும்  உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த  வைரஸ் தாக்கப்பட்ட கிராமத்தை விட்டு பொதுமக்கள் வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  ஹன்டா வைரசால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க 50 விழுக்காடு மட்டுமே வாய்ப்பு இருப்பதாக  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...