Designed by Iniyas LTD
நீதிக்கான நடைப்பயணம் நூற்றுக்கணக்காண மக்களின் ஆதரவுடன் சுவிஸ் நாட்டை சென்றடைந்தத
தமிழின அழிப்புக்கு நீதி தேடி ஐநா நோக்கி செல்லும் நடைப்பயணம் நேற்று மாலை 6 மணிக்கு சுவிஸ் நாட்டு எல்லைப்பகுதியில் சென்றடைந்தனர் . நடைப்பயண வீரர்களுடன் பிரான்ஸ் நாட்டு மக்கள் இணைந்து அவர்களை சுவிஸ் நாட்டுக்கு அழைத்து செல்ல அங்கு இவர்களை எதிர்பார்த்து காத்துநின்ற சுவிஸ் மக்கள் அனைவரையும் வரவேற்றனர் .
அத்தோடு நேற்று பிரான்ஸ் நாட்டில் நகரசபையுடடான சந்திப்பும் இடம்பெற்றது : இச் சந்திப்பில் நடைப்பயண மனிதநேய செயற்பாட்டாளர்கள் தமது ஐந்து கோரிக்கைகளை உள்ளடங்கிய மனுவை கையளித்தனர் . அத்தோடு நிலப்பறிப்பு பெண்கள் மீதான பாலியல் வன்முறை விடையங்களை உள்ளடக்கிய ஆவணங்களும் கையளித்தனர் .
