Designed by Iniyas LTD
பிள்ளைகள் வெளிநாட்டில்- யாழில் தாயின் விபரீத முடிவு
யாழ் உரும்பிராய் வடக்கில் வயோதிப தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் நான்கு பிள்ளைகளும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த வயோதிபத் தாய் தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மனவிரக்தியில் குரித்த தாய் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றுப் பிற்பகல் அவரது வீட்டிற்கு சென்ற உறவினரொருவர் அவரை வீட்டில் காணவில்லை என தேடி. இறுதியாக வீட்டுக் கிணற்றை எட்டிப் பார்த்த போது அங்கு அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
கிண்ற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.
