தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிள்ளையார் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சிக்கும் படையினர்

ஓமந்தையில் நூறு வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த பிள்ளையார் கோவில் காணி தமக்கே சொந்தம் என்றும், அங்கு புத்த விகாரை ஒன்றை அமைக்கப் போவதாகவும் படையினர் அச்சுறுத்தியுள்ளனர். ஓமந்தைப் பிள்ளையார் கோயிலில் எதிர்வரும் 16 ஆம் திகதி கும்பாபிஷேகம் செய்யும் பொருட்டு அக்கோயில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தற்போது வசந்த மண்டபம், தீர்த்தக் கேணி என்பன கோயிலில் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை ஆலயத்துக்கு சென்ற இராணுவத்தினர், ஆலயக் காணி தங்களுக்கு உரியது என்றும், அதில் தாம் புத்தருக்கு கோயில் கட்டப்போகிறோம், நீங்கள் புனரமைப்பு பணிகளைக் கைவிடுங்கள் என்று கோயில் நிர்வாகத்தினரை மிரட்டியுள்ளனர்.

எனினும் ஓமந்தைப் பிள்ளையார் கோயில் 100 வருடங்கள் பழைமை வாய்ந்தது என்று கூறிய ஆலய நிர்வாகத்தினர், இராணுவத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்,இராணுவத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

omanthai-pillaya

Comments
Loading...