தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புழல் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட காவலர்கள் வீடு திரும்பினர்

puzhal-jailசென்னை புழல் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட காவலர்கள் 3 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். காவலர் முத்துமணிக்கு மட்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து புழல் சிறையில் இருந்த 6 கைதிகள், மதுரை, வேலூர், கடலூர், சேலம், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 இச்சம்பவம் தொடர்பாக அதிகாரி இளவரசன் அளித்த புகாரின் பேரில் உயர் பாதுகாப்பு சிறையில் இருந்த 20 பேர் மீது கொலை முயற்சி, கூட்டாக அதிகாரிகளைத் தாக்குதல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து, புழல் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments
Loading...