Designed by Iniyas LTD
பென்னாகரம் தொகுதியில் அன்புமணி ராமதாஸ் தோல்வி!
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி தோல்வியடைந்தார். திமுக வேட்பாளர் இன்பசேகரன் 76231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாமக வேட்பாளர் அன்புமணி 57501 வாக்குகள் பெற்ற இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் முனுசாமி 50985 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நஞ்சப்பன் 5524 வாக்குகள் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தார்.