தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொருளாதார நெருக்கடி: திவாலாகும் நிலையில் கிரீஸ்

 greeceசர்வதேச நிதியத்திடம் குறித்த நேரத்தில் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் கிரீஸ் நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

 இந்நிலையில், கிரீஸ் நாட்டின் நிதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்க வலியுறுத்தி ஏதென்ஸ் நகரில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

 கிரீஸ் பிரதமர் அலெசிஸ் (Alexis Tsipra) எதிராக கண்டன முழங்களை எழுப்பிய பொதுமக்கள், அலெச்சிஸ் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சர்வதேச செலவாணி நிதியத்திடம் கிரீஸ் பெற்ற கடன் தொகையின் ஒரு பகுதியான சுமார் 51 ஆயிரம் கோடியை செலுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

 இந்நிலையில், இப்பிரச்னையில் இருந்து விடுபட ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், ஐரோப்பிய யூனியன் விதித்த நிபந்தனைகளை கிரீஸ் ஏற்க மறுத்துவிட்டது. இந்த நிபந்தனைகளை ஏற்பது குறித்து ஜூலை 5ம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

Comments
Loading...