தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

போரை முன்னெடுத்தவர்களே எலும்புக்கூடுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – பொ.ஐங்கரநேசன்

1424459_633603183370324_1664394278_n1-620x505எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றமைக்கு, போரை முன்னெடுத்தவர்களும் மக்களை சாகடித்தவர்களுமே பொறுப்புக்கூற வேண்டும் என வடமாகாண விவசாய அமைச்சர், பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவில் அறுவடை விழா, வட மாகாண அமைச்சரின் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.இந்த நிகழ்வில், இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்வது தொடர்பிலான பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது பற்றி அமைச்சர், பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவிக்கையில், இந்த பிரச்சினை தொடர்பில் ஆராய 15 பேர்களைக் கொண்ட ஒரு நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அதிலிருந்து இருவிதமான தலைப்புக்கள் தங்களுக்குத் தரப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

ஐந்து பேர் அடங்கிய குழு பெரியளவு மாற்றத்தைத் தங்களிடம் கோரவில்லை என குறிப்பிட்ட அமைச்சர், பத்துப் பேர் அடங்கிய குழுவினர் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நீர் எடுத்து வருகின்ற திட்டத்தை நிறுத்தி, இரணைமடுவை புனரமைக்கின்ற திட்டத்தை வேறாகவும் யாழ்ப்பாணத்திற்கான நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு இரணைமடு தவிர்ந்த வேறு நீர்மூலங்களைக் கண்டறியுமாறும் கோரியதாகத் தெரிவித்தார்.

அத்துடன், இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான உள்ளக கலந்துரையாடல் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி, இந்தத் திட்டத்திற்கு நிதி உதவி செய்யக் கூடிய ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பொறுப்பாளருடன் கலந்துரையாட முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

Comments
Loading...