Designed by Iniyas LTD
போலி விசாவில் இத்தாலி செல்ல முயன்றவர் கைது!
ஓமானில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஸ்ரீலங்கா பொலிஸார் கைதுசெய்தனர்.
கிளிநொச்சியை சேர்ந்த 25வயதான இந்த இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான வீசாவுடன் இத்தாலிக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் இவரை ஓமானிய பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்திருந்தனர்.
விசாரணையின் முடிவிலேயே அவர் நேற்று நாடு கடத்தப்பட்டார்.
இந்தநிலையில் இன்று அவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.