தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் மகிந்தவுக்கு இடமில்லை: ரவி கருணாநாயக்க  

ravi mahinda

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாம் என்று குறிப்பிட்டுள்ள நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மக்கள் நாட்டை மீண்டும் வெள்ளைவான் யுகத்திற்கு கொண்டு செல்ல விரும்ப மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

மகிந்த புதிய கட்சி ஒன்றை உருவாக்கி தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அது அரசாங்கத்திற்கு சவால் அல்ல என்று குறிப்பிட்ட அவர் இன்று அச்சமின்றி சுதந்திரமாக நாட்டு மக்கள் வாழ்வதாகவும் அதனை இழக்க அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழும் அடித்தளம் இடப்பட்டுள்ளது என்று கூறிய அவர் கடந்த காலங்களில் மக்களின் பொக்கற்றுகளில் இருந்தவைகள் கொள்ளையடிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார். மீண்டும் நாட்டில் வெள்ளைவான் கலாசாரத்தை உருவாக்க முன்னாள் ஜனாதிபதியும் அவரது குழுவும் எந்தக் கூட்டணியில் போட்டியிட்டாலும் களமிறங்கினாலும் தோல்வி நிச்சயம் என்றும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...