தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெக்சிகோவில் சினிமா பாணியில் மரண தண்டனை!

showImageInStoryமெக்­ஸிக்­கோவில் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் கும்­ப­லொன்று இரு ஆண்­களை ஒரு­வ­ருடன் ஒருவர் மோத நிர்ப்­பந்­தித்த பின்னர், அவர்­களில் தோல்­வி­ய­டைந்­த­வ­ருக்கு கொடூ­ர­மான முறையில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­று­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய அதிர்ச்­சி­யூட்டும் காணொளிக் காட்­சி­யொன்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தென் மெக்­ஸிக்­கோவில் தியர்ரா கரியன்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள வனப் பகு­தியில் பட­மாக்­கப்­பட்­டி­ருந்த அந்தக் காணொளிக் காட்­சியில், இரு ஆண்கள் ஒரு­வ­ருடன் சண்­டை­ யி­டு­வதை குறிப்­பிட்ட கும்­பலைச் சேர்ந்­த­வர்கள் சிரித்­த­வாறு கூடி நின்று வேடிக்கை பார்க்­கின்­றனர்.

தொடர்ந்து 40 செக்­கன்­களில் அந்த கும்­பலைச் சேர்ந்­த­வர்கள் அவர்­க­ளது மோதலை தடுத்து நிறுத்தி அவர்­களில் தோல்­வியைத் தழு­வி­யவரை அப்பால் இழுத்துச் செல்­கின்­றனர்.

இத­னை­ய­டுத்து அந்தத் தோல்­வியைத் தழு­விய நபர் மண்­டி­யிட்டு அமரப் பணிக் கப்பட்ட பின்னர் அவருக்கு தலையில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது.

showImageInStory 1

Comments
Loading...