Designed by Iniyas LTD
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வலிகளும், துயரங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார் ஜனாதிபதி சட்டத்தரணி
யுத்தம் தொடர்பான பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றது எனினும் , அவை எவையும் யுத்தத்தின் இன்னொரு விளைவாக மக்கள் அனுபவித்த துயரங்களை முழுமையாக காட்ட தவறிவிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனை காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஷ் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் கடந்த சனிக்கிழமை காணாமல் போனோர் அலுவலகம் விசாரணைகளை நடத்தியப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வலிகளும், துயரங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்,
12 பிராந்தியம்
அதோடு காணாமல் போனோர் அலுவலம் 12 பிராந்திய அலுவலகங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் ,1970ம் ஆண்டுக்குப் பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பில் முறையான பதிவுப் பட்டியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் தமது அலுவலகம் நடத்தும் விசாரணைகளின் அடிப்படையில் விபரத்தரவுகளை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
