தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ரஷ்யாவில் டாமினோஸ் பீட்சா நிறுவனத்திற்கு படையெடுத்த மக்கள்- ஏன் தெரியுமா?

ரஷ்யாவில் உள்ள  டாமினோஸ் பீட்சா நிறுவனம்  தனது புதிய கிளை ஒன்றை அங்கு ஓர் இடத்தில்  துவங்கியது.

அங்கு  வாடிக்கையாளர்களை கவர நிறுவனம் ஒரு வித்தியாசமான டெஸ்டை வைத்தது.

அதாவது தங்களது கம்பெனி லோகோவை உடலில் நிரந்தரமாக பச்சை குத்திக் கொண்டால் இலவச பீட்சா அளிக்கப்படும்.

அதோடு ஒரு வருடத்திற்கு 100 பீஸா என்று 100 வருடத்திற்கு பீட்சா அளிக்கப்படும் என்றும் போட்டி வைத்தது. குறித்த  ஆஃபர் 2 மாதங்கள் நடைபெற இருப்பதாகவும் குறித்த நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் அந்த அறிவிப்பை கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் டாமினோஸிற்கு சென்றுள்ளனர்.

அவ்வளவு பேர் வருவார்கள் என டாமினோஸ் நிறுவனமே எதிர்பார்க்கவில்லையாம்.

இதனால் டாமினோஸ் நிறுவனம் இரண்டு மாதம் நடத்த வேண்டிய குறித்த போட்டியை 4 நாட்களில் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு இறுதியாக 400 பேர் இந்த இலவச பீட்சா சலுகைக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறாரகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...