தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுணதீவு காட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்படிச்சேனை உம்மாரி காட்டுப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  நேற்றுமாலை (19) மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான 43 வயதான மாணிக்கப்போடி தற்பரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மது அருந்தியதனாலே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்க கூடுமென அப் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் சட்டவிரோத மது தயாரிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...