தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது! சீனா

colw020150313689419983095124630757_4192534_26042016_spp_gry-450x259ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் முன்மொழிவுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்காவை சீனா அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிடுவதாக சீனா கூறியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்ட நல்லிணக்க பொறிமுறை மூலம் புதிய முரண்பாடுகளை உருவாக்க வேண்டாம் என ஸ்ரீலங்காவின் தலைவர்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது.

உள்ளுர் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஸ்ரீலங்காவில் தமது திட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments
Loading...