Designed by Iniyas LTD
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் – பிரதமர் மோடி சந்திப்பு
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், டெல்லியில் பிரதமர் மோடியை, சந்தித்து பேசினார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு மோடியை மெர்கல் சந்தித்துப் பேசினார். ஐதராபாத் ஹவுஸில் பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். மெர்க்கலை வரவேற்ற மோடியிடம் அவர் இந்தியாவின் வளர்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை ஜெர்மனி வழங்கும் என கூறினார் .
மேலும் ராணுவம், பாதுகாப்பு, கல்வி, எரிசக்தி, உயர் தொழில்நுட்பம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இதற்கு முன்னதாக டுவிட்டரில் மெர்கலின் வருகைக்கு வரவேற்பு தெரிவித்து கருத்து தெரிவித்திருந்த மோடி, ஏஞ்சலா மெர்கலின் வருகை மூலம் இரு நாடுகளிடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.