தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அமெரிக்காவில் இறந்தவர் முகத்தை இளைஞருக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை!

faceஅமெரிக்காவில் விர்ஜினீயா மாகாணத்தைச் சேர்ந்த ரிச்சர்டு நோரிஸ் (22) என்ற இளைஞரின் சிதைந்த முகத்தை, உயிரிழந்த இளைஞர் ஒருவரின் முகத்தைக் கொண்டு மாற்றி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்ற போது நோரிஸின் முகம் சிதைந்துவிட்டது. இதனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றும் முயற்சி தோல்வி அடைந்தது.

எனவே, அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த ஜோஷ்வா என்ற இளைஞர் உடல் நலக் குறைவால் உயிரிழந்த போது, அவரது முகத்தை நோரிஸுக்கு பொறுத்தி மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

இதனால், நோரிஸின் முகம், உயிரிழந்த ஜோஷ்வாவின் முகமாக உருமாறியது. தற்போது நோரிஸ் பூரண குணம் அடைந்தார். அவர் மட்டும் அல்லாமல், உயிரிழந்த ஜோஷ்வாவையே நேரில் பார்ப்பது போல இருப்பதால், முகத்தை தானமாக வழங்கிய ஜோஷ்வாவின் குடும்பத்தாரும் ஆனந்தம் அடைந்துள்ளனர்.

Comments
Loading...