Designed by Iniyas LTD
ஆண்ட – ஆளும் கட்சிக்கு எதிராக ஆட்சி மாற வேண்டும் – பொன். ராதாகிருஷ்ணன்
ஆண்ட கட்சி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஒவ்வொரு கட்சி தலைவருக்கும் தங்கள் கட்சியின் தலைமையில் தேர்தலின் போது கூட்டணி அமையவேண்டும் என்று விரும்புவது இயல்பானது என்றார். அதன் அடிப்படையில், தேமுதிக தலைவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்ட கட்சி மற்றும் ஆளும் கட்சிக்கு எதிராக ஆட்சி மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றால் தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றுபட்டு போட்டியிட்டது போல், தற்போதும் போட்டியிட வேண்டும் என்று கூறினார்.
தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.