தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் முகத்தை மூடி உடையணிய தடை…

நாட்டினுள் பொதுமக்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இடையூறாக முகத்தை மூடி உடையணிய இன்று திங்கட்கிழமை(29) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால்
அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாகவுள்ள நபரொருவரின் முகத்தைத் தெளிவாக காணக் கூடியதாகவிருப்பது அவசியமென்பது இந்த உத்தரவின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எந்தவொரு சமூகப் பிரிவையும் அசெளகரியத்துக்கு உள்ளாக்காத வகையில் அமைதியும்,

நல்லிணக்கமும் மிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...