Designed by Iniyas LTD
ஊடகவியலாளர் கே.குமணனின் “உத்தரிப்புக்களின் அல்பம்” புகைப்பட கண்காட்சி!
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர்கணபதிப்பிள்ளை குமணனின் “உத்தரிப்புக்களின் அல்பம்” என்ற புகைப்பட கண்காட்சி ஒன்று யாழ் பொதுநூலகத்துக்கு எதிரில் (16) காலை 9மணிதொடக்கம் மாலை 5 மணிவரையில் இடம்பெறவுள்ளது .
இளம் ஊடகவியலாளரான கே.குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தின்குமுழமுனையை சேர்ந்தவர். போரின் மொத்த விளைவுகளையும் சந்தித்து,அதற்கூடாகவே வளர்ந்தவர்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்துஊடகத்துறையில் இயங்கிவரும் இவர், மக்கள் போராட்டங்கள் பலவற்றைகளத்தில் நின்றே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்தவகையில் காணாமலாக்கப்பட்டோர் நடத்திவரும்தொடர்போராட்டங்களின்போது இவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில்சிலவற்றை இன்று காட்சிப்படுத்துகின்றார்.
காணாமலாக்கப்பட்டோர்விடயத்தை அடுத்த தலைமுறையும் கையிலெடுத்துப் போராடத்தொடங்கும்தொடக்கப்புள்ளியாக அமையவேண்டும் எனும் நோக்கோடு இந்த புகைப்படகண்காட்சியை (16) காட்சிப்படுத்துகின்றார் .
