Designed by Iniyas LTD
கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்பருத்தித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து யாழ்பருத்தித்துறையை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து சிங்கப்பூர் செல்ல முயற்சித்தபோதே குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரின் பயணப்பொதியை சோதனையிட்ட போது , சிங்கப்பூரில் இருந்து இங்கிலாந்துக்கு பயணம் செய்யும் விமானப் பயணச்சீட்டொன்றும் , சில போலியான ஆவணங்களும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக தெரிவிகப்பட்டுள்ளது.