Designed by Iniyas LTD
காணாமல் போன மகனை தேடுகின்றார் தயார்
வாழைச்சேனை கோழிக்கடை குறுக்கு வீதியில் வசித்து வந்த முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞரை கடந்த ஜனவரி 07ம் திகதி முதல் காணவில்லை என கடந்த 12ம் திகதி வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் அவரின் தாயாரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்முனையிலுள்ள அரபுக் கல்லூரி ஒன்றில் மார்க்கக் கல்வி பயின்று வரும் முகம்மது நிப்ராஸ் என்ற இளைஞர் விடுமுறையில் வீடு வந்து மீண்டும் அரபுக் கல்லூரிக்கு சென்றவர் இன்று வரை அங்கு செல்லவில்லை என குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது மகன் தொடர்பாக தவல்கள் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0940777266121 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு தாயார் கேட்டுக் கொண்டுள்ளார்.