Designed by Iniyas LTD
கிரானைட் நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை பிப்ரவரி 11க்கு ஒத்திவைப்பு
மதுரையில் சட்டவிரோத கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் கீழவளவு, திருவாதவூர், இடையப்பட்டி உள்ளிட்ட 8 கிராமங்களில் பட்டா நிலங்களில் சட்டவிரோதமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்க உத்தரவிடக் கோரி, ஆட்சியர் சுப்பிரமணியன் வழக்குத் தொடர்ந்தார்.
நான்கு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக 34 வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இன்றைய விசாரணைக்குப் பிறகு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 11-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.