Designed by Iniyas LTD
ஜிம்பாப்வே அணிக்கு பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்பு!
பாகிஸ்தான் வந்துள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு தங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டன் எல்டன் சிகும்புரா தெரிவித்துள்ளார்.
வீரர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். லாகூர் மைதானம் மற்றும் ஜிம்பாப்வே அணி தங்கியுள்ள ஹோட்டலைச் சுற்றி 10 ஆயிரம் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பன குறிப்பிடத்தக்கது.