தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழீழம் மலரும் – ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் – நாள் 25

tamil vanதமிழீழம் மலரும் – ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் – நாள் 25

 ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் நேற்று 25 ஆவது நாளாக வெற்றிகரமாக Strassburg நகரை தாண்டி செல்கின்றது . நேற்றைய தினத்தில் நடைப்பயண வீரர்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் எமது மாவீரர்களின் , மக்களின் நினைவோடு நீதி தேடி ஐநா நோக்கி உறுதியோடு பயணித்தனர்.[youtube url=”video_url”

[youtube url=”http://www.youtube.com/watch?v=YWLl5P9lUJA&feature=youtu.be” width=”560″ height=”315″]

நேற்றைய நாளில் நடைப்பயணம் சென்ற நகரத்தில் , தமிழ் மக்களுடன் இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வில் ஈடுபட்டனர் . நகர மக்களின் சார்பாக நடைப்பயண வீரர்களை குழந்தைகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர் .

[youtube url=”http://www.youtube.com/watch?v=mfrz0va1ZRY&feature=youtu.be” width=”560″ height=”315″]

அத்தோடு பாரிஸ் நகரில் இருந்தும் தமிழ் உறவுகள் வருகை தந்து நடைப்பயண வீரர்களுடன் இணைந்து நடந்தனர் .நடைப்பயணத்தை பற்றிய தகவல்களை உள்ளூர் ஊடகங்கள் பல ஆர்வத்துடன் பிரசுரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அத்துடன் தொடர்ச்சியான அரசியல் சந்திப்புகளும் இடம் பெற்றுவருகின்றது .

மேலும் எதிர்வரும் 24.02.2014 திங்கள் அன்று நோர்வே நாட்டினுடைய பாராளுமன்ற முன்றலில் தமிழ் வண்டி பரப்புரை ஊர்தி பயணம் ஆரம்பமாகி பல நாடுகளை ஊடறுத்து 10.03.2013 அன்று ஐ.நா.வினுடைய மனிதவுரிமை மன்றத்தை சென்றடையவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய நாளில் தமிழ் வான் தனது பரப்புரை பயணத்தை மேற்கொள்ள தனது தயார்ப்படுத்தலை செய்தது .

Comments
Loading...