தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திமிங்கலத்தின் வாய்க்குள் சென்று தப்பிய ஆய்வாளர்…

தென் ஆப்பிரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த கடலடி ஆய்வாளரை திமிங்கலம் ஒன்று விழுங்க முயன்ற காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எலிஸபெத் துறைமுகம் பகுதியில் ஏராளமான சார்டின்ஸ் ((sardines)) வகை மீன்கள் வந்ததைத் தொடர்ந்து, அவற்றை வேட்டையாடுவதற்கு டால்பின்கள், கென்னட் வகை பறவைகள் போன்றவைகளும்  அங்கு சென்றன.

அப்போது, உலகின் மிகப்பெரிய பாலூட்டிகளில் ஒன்றான பிரெய்ட் வகை திமிங்கலமும், சார்டின்ஸ் மீன்களை உண்பதற்காக வந்திருந்தன.

இதனை ஆய்வாளர்கள் படம்பிடித்தபோது, சார்டின்ஸ் மீன்களுடன் நீந்திக் கொண்டிருந்த ரெய்னர் சிம்ஃப் ((Rainer Schimpf)) என்பவரை பிரெய்ட் திமிங்கலம் விழுங்க முயன்றது.

எனினும்   திமிங்கலத்தின் வாய்க்குள் சென்ற ரெய்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் வெளியேறி உயிர்  தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...