Designed by Iniyas LTD
தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் 7 பேர் காத்தான்குடியில் கைது…
தேசிய தௌஹீத் ஜமாத்தின் உறுப்பினர்கள் 7 பேர் காத்தான்குடியில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத்தின் செயற்பாடுகளுக்கு நேரடி ஒத்துழைப்புகளை வழங்கி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதோடு குறித்த நபர்கள் நீண்டகாலமாகபல்வேறு இடங்களில் பயிற்சிகளையும் வழங்கி வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்கள் தற்போது காத்தான்குடி காவற்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா – பளக்பூல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்தின் பயிற்சி முகாம் குறித்த மேலதிக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக இறுதிக்கட்ட பயிற்சிகளை அவர்கள் குறித்த முகாமிலேயே மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.