Designed by Iniyas LTD
போலி கடவுச்சீட்டில் சென்றவர் கட்டுநாயக்காவில் கைது…
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு சென்ற வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசில் நாட்டிற்குரிய கடவுச்சீட்டின் ஊடாக குறித்தநபர் மீண்டும் பிரித்தானியா நோக்கி பயணிக்க முற்படும் போது விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
31 வயதுடைய ஈரான் நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.