தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி அணி வெற்றி!

jermaniகனடாவில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி 10க்கு- பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. நார்வே அணி நான்கு கோல்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை தோற்கடித்தது.

ஏழாவது உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் கனடாவில் களைகட்டி வருகின்றன. ஒட்டாவா நகரில் நடைபெற்ற பி பிரிவு ஆட்டத்தில், இரண்டு முறை சாம்பியனான ஜெர்மனி அணி, ஐவரி கோஸ்டை எதிர்கொண்டது. ஜெர்மனி வீராங்கனைகள் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் SASIC, MITTAG ஆகியோர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அணியை முன்னிலை பெறச் செய்தனர்.

 இந்நிலையில் 2-வது பாதியிலும் ஜெர்மனி அணியினர் 4 கோல்களைப் பதிவு செய்தனர். ஐவரி கோஸ்ட் அணியின் கோல் முயற்சிக்கு கடைசி வரை பலன் கிட்டவில்லை. ஆட்டநேர முடிவில் ஜெர்மனி,10க்கு- பூஜ்யம் என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

மேலும்  பி பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், நார்வே அணியை எதிர்த்து தாய்லாந்து களமிறங்கியது. ஆட்டத்தின் 15 நிமிடத்தில் நார்வே வீராங்கனை RONNINS முதல் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து ISABELL அடுத்தடுத்து இரண்டு கோல்களைப் பதிவு தாய்லாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

 அதன்பின் பதில் கோல் அடிப்பதற்கு தாய்லாந்து வீராங்கனைகளை மேற்கொண்ட முயற்சிகளை நார்வே அணியினர் முறியடித்தனர். ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் நார்வே அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதன் மூலம் நார்வே அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Comments
Loading...