Designed by Iniyas LTD
மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள்: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தில்லி ராஜ்காட்டில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்ககைய்ய நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.