Designed by Iniyas LTD
மஹிந்தவின் மற்றுமொரு உருவமே மைத்திரி …
மஹிந்தவின் மற்றுமொரு உருவமே மைத்திரி என்பதை தற்போதைய ஜனாதிபதி நிரூபித்துள்ளார்
போலீசார் இருவரின் சூட்டுச்சம்பவத்தோடு தோடர்புடையவர் என கைது செய்யப்பட்டு நான்காம் மாடியில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த சொல்லி உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் இச் செயலானது குரூரமான சர்வாதிகார போக்கையே iஇது காட்டுகின்றது

கடந்த 29.11.2018 அன்று வவுனதீவு பொலிஸ் காவலரணில் வைத்து இரண்டு பொலிசார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு படுத்தி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,
தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் கதிர்காமத்தம்பி-இராசகுமாரன் (அஜந்தன்) என்பவரை முன் மாதங்களுக்கு தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான விசேட அனுமதியைப் பெற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போதிலும்,
அவரால் பொலிசார் சுட்டுக்கொல்லப்படவிலலை என்ற விடயத்தை உறுதிப்படுத்திய புலனாய்வுப் பொலிசார். அதன் பின்னரும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவரை அடையாளம் காட்டுமாறு கேட்டே தடுத்து வைத்துள்ளனர்.
இது சட்டத்திற்கும் நீதிக்கும் முரணானவையாக உள்ளமையை பல சிவில் சமூகத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்
எனினும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர் இது விடயத்தில் இது வரையிலும் எந்த கரிசனையும் கொள்ளாமல் மௌனமாக இருப்பது தமிழ் மக்களிடையே ஆத்திரத்தினை உண்டு பண்ணியுள்ளது